8 Mar 2017

தடைச்சட்டம்


கவலை
கருத்தரிக்கவில்லையே என்று இரண்டு வருடங்களாக கவலைப்பட்ட ரத்னா அடுத்து பொம்பளை பிள்ளையாக இருக்குமோ என கவலைப்பட ஆரம்பித்தாள்.
*****
மதிப்பு
"ஆயிரம், ஐநூறு நோட்டை செல்லாதுன்னு அறிவிச்சதால உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைச் சொல்லுங்க?" என்று நிருபர் கேட்டதும், "அந்த நோட்டையெல்லாம் நாங்க பார்த்து இல்லீங்க! எங்க தினக்கூலியே நூத்து இருவது ரூபாதாங்க!" என்றான் மாடசாமி.
*****
தடைச்சட்டம்
"பினாமி தடைச் சட்டம் வரப் போகுது!" என்றதும் "இதெல்லாம் தெரிஞ்சுதான் வெளிநாட்டுல இடத்‍தை வாங்கிப் போட்டேன்!" என்றார் ராசாமணி.
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...