பேச்சுகள்
சென்னைக்கு அருகே
மிகக் குறைந்த தூரத்தில்
என்று
அழகானப் பெண்ணொருத்தி
தொலைக்காட்சியில் தோன்றி
பேசிய இடத்தை
பார்க்கப் போயிருந்த
நாளில்தான்
அங்கு பேசிக் கொண்டிருந்தார்கள்
இரண்டு நாளுக்கு முன்
தற்கொலை செய்து கொண்ட
ஒரு விவசாயியின் மரணத்தை!
*****
நிமித்தம்
கட்சி மாறி வந்து
மாலை போட்டு
மரியாதை செய்தார்
காமராசர் படத்துக்கு!
*****
No comments:
Post a Comment