அப்பாவும், அம்மாவும்
டவுனிலிருந்து டூவீலரில் திரும்பிக் கொண்டிருந்த போது முட்டிக்
கொண்டு வருகிறது என்று சாலை ஓரத்தில் சிறுநீர் கழித்தார் அப்பா. வீடு வரும் வரை காத்திருந்தாள் அம்மா.
*****
மீதி
மீதமிருந்த சில்லரைக்கு சாக்லேட்டைக் கொடுத்த போது, வாழைப்பழம்
கேட்ட குமரப்பாவை வியப்போடு பார்த்தார் பெட்டிக்கடைக்காரர்.
*****
கஷ்டம்
"சம்பாதிக்கிறது கஷ்டமா இல்ல மாப்ள! சில்லரை மாத்துறதுதான்
கஷ்டமா இருக்கு!" உரையாடிக் கொண்டு இருந்தனர் உழைப்பாளர் சிலைக்குக் கீழே இரண்டு
நண்பர்கள்.
*****
No comments:
Post a Comment