10 Mar 2017

துணைக்குருவி


துணைக்குருவி
இந்த ஆயிரத்திற்கு
பத்து நாள்கள் ஆகி விட்டன
ஒரு குருவியைப் போல் சேர்க்க.
நான் அறிவேன்
ஆயினும் என்ன செய்வேன்
இன்னொரு ஆயிரம் இருந்தால்
மறுநாளுக்கும்
துணை இருப்பாய்
அன்பை அடை காக்கும்
ஒரு நிஜக் குருவியைப் போல ஓய்வாக!
*****

இனிய பொழுது
எந்தக் கவிதையும் தோன்றாத
இந்தப் பொழுது
ஒரு
இனிய கவிதைப் பொழுது!
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...