கடைசியாகப்
பார்த்தது
"கடைசியாக
அவரை எப்போ பார்த்தீங்க?" என்ற காவலரின் விசாரணைக்குப் பதில் சொன்னாள் அலமேலு,
"ஏ.டி.எம். போறதுக்கு முன்னாடி!"
*****
வந்து
சேர்ந்தார் தாத்தா
மகளின்
பிரசவத்துக்கு பணம் எடுக்கச் சென்ற வசந்தராஜன், தன் பேத்தியின் பிரசவத்தின் போது வந்து
சேர்ந்தார் பணத்தோடு.
*****
ஏமாற்றம்
தினம்
தினம் ஏ.டி.எம்.இல் பணம் எடுக்க வந்து பணம் இல்லாமல் ஏமாந்து போனார் பேங்க் மேனேஜர்
பாண்டி.
*****
No comments:
Post a Comment