தாமரை நெஞ்சம்
மாநகரின்
மாபெரும் கட்டிடத்தின்
அடியில்
முன்பொரு காலத்தில்
தாமரைக்குளம் என்றொரு
குளம் இருந்தது.
இப்போதொரு காலத்தில்
மாபெரும் அந்தக் கட்டிடத்தின்
அருகில் ஓடும்
சாக்கடை சிறு வாய்க்காலில்
ஆகாயத் தாமரைகள்
நிறைந்து இருக்கின்றன
தாமரைகளை நினைவு படுத்தியபடி!
*****
சொல்கிறாள்
கருப்பு நிறம்
என்று
சொல்லிக் கொடுப்பதை
காக்கா கலர்
என்றே சொல்கிறாள்
அம்முக்குட்டி.
*****
No comments:
Post a Comment