7 Mar 2017

பட்டணப் புரிதல்


பட்டணப் புரிதல்
கேனில் தாகம் தணிய
சிலிண்டரில் விசில் சத்தத்தோடு சோறு பொங்க
பாக்கெட்டில் பால் வந்து விழ
பிரிட்ஜுக்குள் காய்கறிகள் உயிர் கொள்ள
முன்வாசல் தாண்டி சாக்கடை ஓட
வியர்வை அப்பிய உடலோடு
அறுபது பேர் பயணிக்க வேண்டிய பேருந்தில்
நூற்றிருபது பேர் பயணிக்க
கொசுவர்த்திச் சுருளோடு இரவுகள் கழிய
பட்டிக்காடு என்பதில்
என்னென்ன இருந்தது என்பதை
பட்டணம் வந்து புரிந்து கொள்வீர்!
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...