வன்மம்
நான்
நான்கு கிளிகள் வளர்க்கும்
ரகசியம் அறிந்து
ரகசியமாய்ப் பூனை வளர்க்கிறாய்
நீ
நான் கூண்டுகளைத் திறந்து
விட்டது
அறியாமல்.
*****
வாசமும் மணமும்
மரண வீட்டுக்குள்
ஊதுவத்தியின் புகையெனப்
பரவிக் கொண்டிருக்கிறது
வந்திருக்கும்
உறவுகளுக்காவும், நட்புகளுக்காகவும்
சமைக்கப்படும்
உருளைக் கிழங்கின் வாசமும்
ஏலக்காய்த் தட்டி போடப்படும்
டீயின் மணமும்.
*****
No comments:
Post a Comment