13 Mar 2017

கால ஜாலம்


கால ஜாலம்
வருவதே போதும்
வந்ததன் வினையை
அனுபவிக்கவே
காலம் போதாது.

அவர்களை
சமாதானப்படுத்த முடியாது
அவர்களே
சமாதானமாவார்கள்
சண்டையை விடும் போது.

அமைதியின்மை ஒரு மடங்கு வேதனை
பொறுமையின்மை ஒரு மடங்கு வேதனை
இரண்டும் சேர்ந்தால் பல மடங்கு வேதனை

இதெல்லாம்
மாறிக் கொண்டே இருக்கும்,
நிரந்தரமாக இருப்பதாக
நினைப்பவர்கள்
முதலில் அழிவார்கள்.

முடிந்து விட்டதாக நினைக்காதீர்கள்
அது
அங்கே
தொடங்கிக் கொண்டு இருக்கிறது.
*****

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...