4 Mar 2017

பாம் பாமும், ம்மாவும்


கேட்டால்...
நான் வாசித்த வயலினை
உடைத்து விட்டு,
எங்கிருந்தோ கசிந்து வந்த
இனிய இசையை
ரசித்துக் கொண்டிருந்தாய்.
ஊரில் கேட்டால்...
உன்னை உத்தம புருஷன் என்றும்
என்னைப் புருஷன் சொல்லுக்கு
அடங்காத பிடாரி என்றும்
சொல்வார்கள் என்பதால்
கேட்காமல் இருந்து விட்டேன்
உடைந்த வயலினை
சரிசெய்து தரச் சொல்லியோ
அல்லது
மறுபடியும் ஒரு புதிய வயலினை
வாங்கித் தரச் சொல்லியோ!
*****

பாம் பாமும், ம்மாவும்
பாம் பாம் என்ற ஒலியோடு செல்வது
பால் வண்டி என்பது
புரியாமல் பார்த்துக் கொண்டிருக்கும்
பசித்த இளங்கன்று
ம்மா... ம்மா... என்று
அழைத்துப் பார்க்கிறது
பால் கொடுக்க மறந்து விட்டதோ என்று
மடி வற்றிய தாய்ப் பசுவை.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...