2 Mar 2017

அருவி என்பது...


காரணம்
ஒட்டு மொத்தமாக
எல்லாரும் காரணம் என்று புரிகிறது.
தன் தற்கொலைக்கு
யாரும் காரணமில்லை என்று
எழுதி வைத்த காகிதத்தோடு
தூக்கில் தொங்கியவனைக்
காப்பாற்ற முடியாமல் போனதில்!
*****

அருவி என்பது...
"அருவி என்றால் என்னம்மா?"
என்று கேட்ட மகளுக்கு
"எப்போதும்
கொட்டிகிட்டே இருக்கிற
கார்ப்பரேஷன் குழாய்"
என்கிறாள்
மாநகரத்துத் தாயொருத்தி.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...