2 Mar 2017

தாயின் கருவறைப் புசித்தா பிள்ளைகள் பசியாறுவது?


தாயின் கருவறைப் புசித்தா பிள்ளைகள் பசியாறுவது?
            கல்வி,
            மருத்துவம்,
            சுகாதாரம்
என்று படிப்படியாக எல்லாம் தனியார்மயமாகி விட்டது. இயற்கை வளங்கள் மட்டும் மிச்சம் இருக்கிறது. அதையும் தனியார்மயமாக்கி விட்டால் வேலை முடிந்து விட்டது.
            இதை ஒரு பழக்கமாக, இயல்பாக ஆளும் வர்க்கம் ஏற்படுத்திக் கொண்டு விட்டது. எதை எடுத்தாலும் தனியார்மயமாக்குவது.
            பூர்வ குடிகளான விவசாயிகளை அழித்தால்தான் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற பெரும் தனியார் நிறுவனத் திட்டங்கள் சாத்தியம். அதற்கான அழித்தொழிப்பு வேலை இந்த ஆண்டு காவிரி நீர் வராததிலிருந்தே துவங்கி விட்டது.
            இப்போது நெடுவாசல் தொடங்கி அருகில் நம் வீட்டு வாசல் வரத் தொடங்கி விட்டது.
            நம் நாடு விவசாய நாடு. விவசாயம்தான் நம் கலாச்சாரத்தின் தொப்புள்கொடி. விவசாயத்தைப் பலி கொடுத்து நாம் பெறுவது பழியாகத்தான் அமையும். தாயின் கருவறை புசித்தா பிள்ளைகள் பசியாறுவது?
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...