சமாதானம் உண்டாகுவதாக!
இவ்வளவு மனிதர்களைக்
கொன்று குவித்த பிறகு
எதற்கு இந்தப் பேச்சுவார்த்தை
என்று தோன்றியது.
இதை நிராகரிப்பதற்கும்
வாய்ப்பில்லை என்பதால்
எப்படி நடந்தது
இந்த இனப்படுகொலை என்று
கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்,
அதை முன்பு
வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள்!
இப்படித்தான் நிகழ்ந்தது
என்று விளக்கிய பின்பு
அவர்கள்
மன்னிப்பையும், சமாதானத்தையும்
வழங்கினார்கள்
கொடூரமாய்க் கொன்று குவித்தவர்களுக்கு!
*****
No comments:
Post a Comment