17 Mar 2017

ஆணென்றாய்... பெண்ணென்றாய்!


ஆணென்றாய்... பெண்ணென்றாய்!
நடுஹாலில் அமர்ந்து கொண்டு
நீயொரு ஆணென்றாய்
சமையற்கட்டில் இருந்த
என்னைப் பெண்ணென்றாய்
முதலில் உணவுண்டு
நீயொரு ஆணென்றாய்
எஞ்சியதை உண்ட
என்னை பெண்ணென்றாய்
டூவீலரில் அமர்ந்து ஓட்டி
நீயொரு ஆணென்றாய்
பின்னால் அமர்ந்து வந்த
என்னை பெண்ணென்றாய்
அலுவலகம் விட்டு
இஷ்டம் போல் வீடு திரும்பி
நீயொரு ஆணென்றாய்
அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப
சற்று தாமதமானதில்
என்னைப் பெண்ணென்றாய்
உன் ஏ.டி.எம். கார்டோடு,
என் கார்டையும் வாங்கிக் கொண்டு
நீயொரு ஆணென்றாய்
ஏ.டி.எம்.கார்டு இல்லாத
என்னை பெண்ணென்றாய்.
*****

No comments:

Post a Comment