10 Mar 2017

யாதும் எம் வீடே


தூக்கு
ப்ரிட்ஜூக்கு மேலே
பிம்பமாய்
தூக்கில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
உறி!
*****

யாதும் எம் வீடே
மூன்றாம் தெருவில்
ஒரு வீடு,
கிரின்வேஸ் ரோட்டில்
ஒரு வீடு,
சன்னிதித் தெருவில்
ஒரு வீடு,
இப்போது
புதுத் தெருவில்
ஒரு வீடு
யாதும் எம் வீடே
என்பவன்
வாடகைக் குடித்தனக்காரன்!
*****

No comments:

Post a Comment