7 Mar 2017

அது போது...


அது போது...
என்னிடம் கொஞ்சம் கோபம் இருந்த போது கூட
மனிதனாக இருந்தேன்.
கடும் சொற்களால் திட்டிக் கிளர்ந்த நேரங்களில்
கண்ணில் பட்டவர்களுக்கு ஏதோ செய்தேன்.
விரக்தியில் விம்மி அழுத போது
சக மனிதன் மேல் நேசம் கொண்டவனாய் இருந்தேன்.
காறி உமிழ்ந்து எதிர்ப்பைப் பதிந்த போது
சுற்றியிருந்தவர்களுக்கு ஆதரவாய் இருந்தேன்.
பொறுமை கொண்ட போதுதான்
அவர்களுக்கு அடிமை ஆனேன்.
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...