பிரியங்களின் சேர்க்கை
மெளனங்கள்
புரியும் போதில்தான்
விரிகிறது காதல்.
அதுவரை
பேசிப் பேசியே
பிரிவுறுகிறது
ஈகோவைச் சுமக்கும்
பிரியங்கள்.
*****
கட்டு
"என் பிரியமானவர்களே!
என் மரணத்திற்கு
வருகை புரிந்த பெரியவர்களே!
என்னிடம்
ஒரு முறையாவது
பேசியிருப்பீர்களா?"
கேட்க நினைக்கும்
தாத்தாவின் வாயில் கட்டு.
*****
No comments:
Post a Comment