4 Mar 2017

சில மாதங்கள் ஆன பின்...


வாழ்வு
வைபரில் பேசிக் கொண்டிருந்த
கண்ணன் உறங்கி விட
வாட்ஸ் அப்பில் வந்த
பலராமனோடு
சாட் செய்து கொண்டிருந்தாள்
முதியோர் இல்லத்தில் இருந்த
தாய் தேவகி.
*****

சில மாதங்கள் ஆன பின்...
திரைக்கு வந்து
சில மாதங்களே ஆன
திரைப்படம்
சேனலில் ஓடிக் கொண்டிருந்தது.
அதை திரையில்
சில மாதங்களுக்கு முன் ஓட்டிய
திரையரங்கம் இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...