3 Mar 2017

வாசஸ்தலம்


வாசஸ்தலம்
மார்கழி முழுவதும்
தினம் தினம்
பத்து அல்லது
பத்தரை மணிக்கு
எழுந்திருப்பவன்தான்
பங்குனி பாதியிலேயே
பரபரக்கிறான்
கோடை தொடங்கியதாக
கொடைக்கானல் போக வேண்டுமென!
*****

டையல்
மூஞ்சூறு வாகனன் முன்
படைக்கப்பட்ட படையலின்
பத்தி செருகி வைக்கப்பட்ட
வாழைப்பழம்
அங்கேயே தங்கி விட,
நள்ளிரவு பசி பொறுக்க முடியாமல்
அதைத் தின்று முடித்தார்
மூஞ்சூறு வாகனன்
வடிவில் வந்த அவர்.
*****

No comments:

Post a Comment