7 Mar 2017

வீர மரணம்


நிச்சயம்
பினாமி தடைச் சட்டம் பற்றி கேள்விப்பட்ட புஷ்பபாண்டியன் பினாமி பெத்தபெருமாள் மகனுக்கே தன் மகளைக் கொடுப்பதென முடிவெடுத்தார்.
*****
வீர மரணம்
விடுமுறைக்கு மிலிட்டிரியிலிருந்து ஊருக்கு வந்த பிரபாகர் ஏ.டி.எம்.இல் பணம் எடுக்க வரிசையில் நின்ற போது மாரடைப்பால் இறந்து போனான்.
*****
நான் ஆனால் . . .
நான் முதல்வரானால்... என்று ஆசிரியர் கொடுத்த தலைப்பைத் திருத்தி எழுதிக் கொண்டான் மோகன், நான் தலைமைச் செயலாளரானால்...
*****

No comments:

Post a Comment