6 Mar 2017

கடவுச் சீட்டு


கடவுச் சீட்டு
போரில் செத்துப் பிழைக்க விருப்பமின்றி
வேறு நாட்டிற்குச் சென்ற போது
கடவுச்சீட்டு கேட்டார்கள்.
இல்லையென்ற போது
திருப்பி அனுப்பினார்கள்.
பிழைக்காமல் சாகலாம், சாவெனும் உலகில்
எவன் கேட்கப் போகிறான் கடவுச்சீட்டு என்று
முடிவெடுத்த போது
அகதிகளின் துயரம் பாரீர் என்று
நீலிக்கண்ணீர் உகுத்து
போரின் துயரங்களைப் பாடினார்கள்.
உங்கள் வீடுகளில் நீங்கள் தஞ்சம் அளித்தால்
தீவிரவாதிக்கும் இடம் கொடுத்ததாய்
உங்களையும் சுட்டுக் கொல்வார்கள் என்பதால்
இந்த உலகக் காவலர்கள் இல்லா
இடம் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே செல்வதற்கு!
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...