வெள்ளத்தில் போன நட்பு
வெள்ளம் வடிந்த பின்
வந்தது
உன் செல்போன் அழைப்பு!
நன்றி நண்பா!
உன் உத்தம அன்பைப்
புரிந்து கொள்ள
ஒரு வாய்ப்பு!
வெள்ளம் அடித்துக் கொண்டு
போன கணக்கில்
எனது ஏ.டி.எம். கார்டும்,
உனது நட்பும்.
*****
பார்முலா
பார்முலாக்களில் வாழ்பவளே
"ஏண்டா இப்படி
வரைமுறை இல்லாம
லவ் பண்றே?"
என்கிறாய்!
பார்முலாக்களில்
வாழ்பவர்களை
பார்மெட் செய்ய
பார்முலாக்கள் இல்லை
என்பது
காதலுக்கே தெரியும்!
*****
No comments:
Post a Comment