20 Feb 2017

தீ


தீ
நள்ளிரவில் காணாமல் போன
நிலவு
அதன் பிறகு வரவேயில்லை!
நிலவு காணாமல் போன
அதிசயம் தெரியாமல்
உறங்கிக் கொண்டிருந்தது
ஊர்!
மறுநாளில் செய்தி ஊடகங்களில்
தீ பிடித்துக் கொண்டது
நிலவு காணவில்லையென!
அதை முதலில் கண்டறிந்தவன்
நான் என்பதை
பறைசாற்றிக் கொள்ளவில்லை!
எனக்குத் தெரியும்
நிலவு ஒரு நாள் தோற்றம் கொள்ளும்
மீண்டும் ஊடகங்கள்
தீப்பற்றிக் கொள்ள!
*****

No comments:

Post a Comment

நிலாதரனின் ‘புத்தனின் அரிவாள்’ ஓர் எளிய அறிமுகம்!

நிலாதரனின் ‘புத்தனின் அரிவாள்’ ஓர் எளிய அறிமுகம்! கீழத்தஞ்சையின் உழைக்கும் பெருங்குடி மக்களான உழவர் தொல்குடிகளின் வாழ்வியல் தொன்மங்களின் க...