24 Feb 2017

வாழ்க்கை


வாழ்க்கை
மெய்யெது? பொய்யெது?
என தெரியாமல்
கனவுகளில் குழப்பிப் போட்டு
இறப்பெது? பிறப்பெது?
என்று தெரியாமல்
நிகழ்ந்து கொண்டிருக்கும்!
நாம் பெரிதாகப்
பீற்றிக் கொண்டு இருப்போம்
வாழ்க்கை என்பது பற்றி!
*****

காத்திருப்பு
ஏரியையும்
குளங்களையும்
வெட்டும் வரை
காத்திருக்காத
மழை
தேங்கி விடுகிறது
தற்காலிக
குளமாகவும், ஏரியாகவும்!
*****

No comments:

Post a Comment

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை!

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை! நூலகங்களுக்குப் போனால் நிறைய ஆச்சரியங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எப்படி இருந்த நூலகம் இப்படி இரு...