24 Feb 2017

எளிமை


இப்போ வேணாமே!
"திடீர்னு உள்ளாட்சித் தேர்தல் அறிவிச்சா என்னா பண்றது? இப்போ வேணாமே!" பழைய ஐநூறையும், ஆயிரத்தையும் கோயில் உண்டியலில் கொட்டி விட்டு வேண்டிக் கொண்டார் பொன்னுச்சாமி.
*****
எளிமை
"வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை!" என்று கோர்ட்டில் சாட்சியம் அளித்து விட்ட வந்த தலைவர் வீட்டில் கட்டுக் கட்டாக கைப்பற்றப்பட்டன புதிய இரண்டாயிரம் நோட்டுகள்.
*****
கணக்கு
"டெபிட் கார்டு, இ வாலட், நெட் பேங்கிங் இதெல்லாம் நமக்கு ஒத்து வராது! நீங்க வழக்கம் போல கணக்குல எழுதிக்குங்க அண்ணாச்சி!" என்று பணமாற்றத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சாமான்களை வாங்கிச் சென்றார் சுந்தரேசன்.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...