செயல்
செயல்படவில்லை என்றால்
பெருமழை பெய்த
பெருவெள்ளக் காலத்திலும்
மது விற்பனை செய்து
மக்களை
மகிழ்வித்திருக்க முடியுமா
கவனத்திற்குரிய
கேள்விக் கேட்பவர்களே?!
*****
மாற்றம்
ஓடமும் ஒரு நாள்
வண்டியில் ஏறும்!
வண்டியும் ஒரு நாள்
ஓடத்தில் ஏறும்!
எரியும் ஒரு நாள்
ப்ளாட் ஆகும்!
ப்ளாட்டும் ஒரு நாள்
ஏரியும் ஆகும்!
*****
No comments:
Post a Comment