ஏக்கம்
சில்லரைகளால்
நிரம்பியிருந்த பிச்சைக்காரரின் தட்டைப் பார்த்த படியே ஏக்கத்துடன் பேருந்தேறினார்
நடத்துநர்.
*****
கிலி
"இந்தப்
பேய்ப் படம் அஞ்சு பார்ட் சார்!" என்று இயக்குநர் சொன்னதுமே
பேயறைந்தது போல கிலி பிடித்து உடல் வியர்க்க உட்கார்ந்திருந்தார் தயாரிப்பாளர்.
*****
சண்டைக்
களம்
"எங்கடா
சண்டை போட்டீங்க? ஏன்டா உன் பிரெண்ட் கூட பேசவே மாட்டேங்றே?"
என்று அப்பா கேட்டதற்கு, மகன் பதில் சொன்னான்,
"வாட்ஸ் அப்ல!"
*****
No comments:
Post a Comment