கருத்து கந்தசாமி அண்ணா! வணக்கமுங்கண்ணா!
2 இன் ஒன், 3 இன் ஒன் கேள்விப்பட்டிருப்போம்.
இப்போது ஆல் இன் ஒன் ஆக செய்திச் சேனல்கள் ஆகி விட்டன.
காமெடி, சென்டிமெண்ட், பைட், மியூசிக்,
பாட்டு என்று கலந்து கட்டி அடிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் பிரேக்கிங்
நியூஸ் கலாச்சாரத்துக்கு குழந்தை குட்டிகள் முதல் பெரியவர்கள் வரை அதைத்தான் பார்க்கிறார்கள்.
அதற்கிடையே அவ்வபோது பேஸ்புக், வாட்ஸ்
அப்பையும் பார்த்துக் கொள்கிறார்கள்.
யாரைப் பார்த்தாலும் அரசியலைப் பற்றி நின்று
நிதானமாக ரெண்டு நிமிடம் கருத்துச் சொல்கிறார்கள்.
நம்மையும் அது பற்றிக் கருத்துச் சொல்ல
நிர்பந்திக்கிறார்கள்.
நல்லது!
இந்தக் கருத்துகளையெல்லாம் வாக்களிக்கும்
போது அவர்கள் எங்கே வைத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. அப்போது வாக்குக்காக
அவர்கள் வாங்கும் ஆயிரத்திற்கும், ஐநூறுக்கும் அவர்கள் சொல்லும் நியாயம், தர்மம் இருக்கிறதே,
அப்பப்பா அம்மம்மா ரகம்.
*****
No comments:
Post a Comment