நேரம்
ராகுகாலம்
எமகண்டம்
நாள்
நட்சத்திரம்
எதையும் பார்க்காது
முட்டை தெறித்து வரும்
குஞ்சு!
*****
பூட்டு
பூட்டியே வைக்கப்படுகிறது
குழந்தைகள் உள்ள
வீடு!
*****
நிலா
கிணறு தூர்ந்த பின்
என்னவாகியிருக்கும்
கிணற்றில் விழுந்த நிலா?
*****
No comments:
Post a Comment