மருது பெரியப்பா
நகரத்தில் சாக விருப்பமின்றி
கிராமத்திற்கு வந்தார்
மருது பெரியப்பா!
ஒவ்வொரு நாளும்
சாவிற்காக
ஏங்கித் தவித்தவர்
இறப்பதற்கு
பத்தரை வருடங்கள் ஆனது!
நினைத்தது போல
ஆப்பரக்குடி தப்பு
அதிர்வேட்டு முழங்க
தேர் போன்ற பாடையில்
சுடுகாடு ஏகினார்!
சொல்லி வைத்தாற் போல
மறுநான் பால்தெளிக்குக்
கூட
இருக்க நேரமில்லாமல்
பறந்து சென்றனர்
பிள்ளைகள்!
கல்யாண சாவு கண்ட
திருப்தியில்
ஆத்மா சாந்தியுற்று
கூடவே கருமாதியையும்
கோலாகலமாகக் கொண்டாட
அறுபதாயிரத்தை
நாட்டாமைக்காரரிடம்
கொடுத்து வைத்திருந்தார்
மருது பெரியப்பா!
*****
No comments:
Post a Comment