மறியல்
"அவங்க
காவிரியைத் தடுத்தா, நாம நெய்வேலி கரண்டைத்தானே தடுக்கணும்!
ஏம்பா ரயிலைத் தடுக்குறாங்க?" என்றான் ரயில்வே
நிலையத்தில் காத்துக் கிடந்த சுட்டி சந்திரன்.
*****
அவரவர்
வேலை
"உடம்பு
சரியில்லைன்னு வேலைக்கு வரலேன்னா அப்புறம் வேலையை விட்டு நிறுத்திடுவேன்!"
என்ற மோனிகா, மெடிக்கல் லீவ் போட்டு அந்த வாரத்தைக்
கழித்துக் கொண்டிருந்தாள்!
*****
அடக்கி
வாசிங்க!
"கொஞ்சம்
அடக்கியே வாசிங்க! மறுபடியும் தேர்தலை ஒத்தி வைக்கிற மாதிரி செஞ்சுபுடாதீங்க!"
பினாமிகளுக்கு இன்ஸ்ட்ரக்சன் கொடுத்துக் கொண்டிருந்தார் தலைவர் தஞ்சைவாணன்.
*****
No comments:
Post a Comment