11 Feb 2017

அரசியல் பேசும் குழந்தைகள்


அரசியல் பேசும் குழந்தைகள்
            சென்னையில் ஆட்சியைப் பிடிப்பதற்கான போட்டிகள் நடக்கின்றன என்றால் அலங்காநல்லூரில் காளைகளைப் பிடிப்பதற்கானப் போட்டிகள் நடக்கின்றன.
            ஊடகங்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டையும் காட்டுகின்றன. சென்னையில் ஆட்சியைப் பிடிப்பதற்கான மல்லுக்கட்டுகளையும் காட்டுகின்றன.
            இது ஊடகங்களுக்கான ஜாக்பாட் காலம்.
            சீரியல் பார்ப்பவர்களே மனம் மாறி செய்திச் சேனல்களைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
            காமெடி சேனல் பார்ப்பவர்கள். மியூசிக் சேனல் பார்ப்பவர்கள். மூவி சேனல் பார்ப்பவர்கள், குழந்தைகள் சேனல் பார்ப்பவர்கள் என்று அனைவரின் மனநிலையும் மாறி விட்டது.
            குழந்தைகள் முதற்கொண்டு தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை குறித்து அனைவரும் கருத்துச் சொல்கிறார்கள். இதை அரசியல் விழிப்புணர்வு என்று பார்ப்பதா? இதை மட்டுமே பேசி மற்ற அனைத்தையும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது எனப் பார்ப்பதா?
            உதாரணமாக ஒரு அலுவலகத்திற்குச் சென்று பாருங்கள்! இதையேத்தான் பேசுகிறார்கள். என்ன காரியத்திற்காகச் சென்றோம் என்று நமக்கே மறந்து விடுகிறது. இதையே நினைத்துக் கொண்டு தவித்தால் தண்ணீர் பருகிறார்களா? பசித்தால் உண்கிறார்களா? தூக்கம் வந்தால் உறங்குகிறார்களா? என்பது தெரியாமல் என் தமிழ்நாட்டினர் படும் பாடு இருக்கிறதே!
            நல்ல உணவு, நல்ல உடை, நல்ல உறைவிடம், நல்ல கல்வி, நல்ல மருத்துவம் வேண்டும் என்ற நிலை மாறி நல்ல செய்தி வேண்டும் என்ற நிலைக்கு வந்து விட்டது தமிழ் இனம்!
*****

No comments:

Post a Comment

மகிழ்ச்சி எனும் மந்திரம்

மகிழ்ச்சி எனும் மந்திரம் இந்த உலகில் எவ்வளவோ புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது எல்லாவற்றையும் புரிய வைக்க அன்பே நீ என்னுடன் இருப்பாயா? ...