17 Feb 2017

செரிமானம்


பதில்
சாக்கடை நதியின்
பொறுமைக்குப்
பதில் சொல்கிறது
பெருவெள்ளம்!
*****

செரிமானம்
பையில் இருந்ததைச்
செரித்து முடித்தது வயிறு!
அந்தப் பாலீதீன் பையைச்
செரிக்க முடியாமல் திணறியது
பூமி!
*****

அன்பு பிறக்க...
எல்லாம் இழந்தால்தான்
அன்பு பிறக்கும்
என்றால்
இன்னொரு பெருமழை
வருக!
*****

No comments:

Post a Comment

கதை புனைந்தவரின் துர்பாக்கியம்

கதை புனைந்தவரின் துர்பாக்கியம் என் கதையை யாரும் கேட்கவில்லை எத்தனையோ முறை முயற்சித்திருக்கிறேன் கேட்போர் யாருமில்லாமல் எப்படி சொல்வது ...