11 Feb 2017

சிறை


சிறை
ஒரு கூண்டு செய்து விட்டால்
போதும்
சிறகோடு இருக்கும் கிளி
பறப்பதில்லை!
*****

எங்கேயோ?
பேருந்தேறி
எங்கெங்கோ
செல்லும் போதெல்லாம்
யோசித்துப் பார்ப்பான் அவன்
குளத்தில் வாழ்ந்த தவளைகள்
குளமது
பேருந்து நிலையமானப் பின்
எங்கே போயிருக்கும்?!
*****

No comments:

Post a Comment