முன் பின்
வெல்கம் என்று
வரவேற்கும் மிதியடி
உள்ளுக்குள் பூட்டியிருக்கும்
வீட்டின் முன்!
*****
இல்லை எனும் குறிப்பு
சுருங்கும் நெற்றி
குறிப்பாய் எழுதுகிறது
இல்லை எனும் குறிப்பை!
*****
அனுபவித்தல்
அநேக காதல்கள்
பழக்கி விடும்
கல்யாணப் பத்திரிகையை
மறுக்காமல் வாங்கிக்
கொள்ள!
*****
No comments:
Post a Comment