அமெரிக்காவில் தமிழ்நாட்டு ஆட்சி
தமிழ்நாட்டில் கடந்த ஐம்பதாண்டுகளாக மாறாத
இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன.
ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும், முன்பிருந்த
கட்சியின் திட்டங்களை நீக்குவதும், பின் முன்பிருந்த கட்சி ஆட்சிக்கு வந்ததும் அதற்கு
முன்பிருந்த கட்சியின் திட்டங்களை நீக்குவதும் தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் வழக்கமான
ஒன்று.
ஆகவே பெரும்பாலும் தமிழ்நாட்டுக் கட்சியின்
கொள்கைகள் எல்லாம், இந்தக் கட்சியின் எதிர்ப்புகள் அந்தக் கட்சியின் கொள்கையாகவும்,
அந்தக் கட்சியின் எதிர்ப்புகள் இந்தக் கட்சியின் கொள்கைகளாகவும் இருக்கும்.
அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள்
பதவியேற்றதும், முன்பிருந்த அரசின் ஒபாமா கேர் திட்டத்தை நீக்கியதும், அவருக்கு எப்படி
தமிழ்நாட்டு அரசியல் முறை தெரிய வந்தது என்று ஆச்சர்யத்தில் உறைந்து போனேன்.
இந்த இணைய உலகில் எதுவும் சாத்தியம்தான்.
இணையத்தின் வாயிலாக அவர் தமிழ்நாட்டு அரசியலைத் தெரிந்திருக்க வேண்டும். அல்லது விக்கிலீக்ஸ்
அசாஞ்சே போன்றோர்கள் தமிழ்நாட்டு அரசியலை கசிய விட்டிருக்க வேண்டும். இதில் எது நடந்தது
என்பதை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்தான் விளக்க வேண்டும்!
*****
No comments:
Post a Comment