16 Feb 2017

சீரணித்துக் கொள்வதாக...


சீரணித்துக் கொள்வதாக...
சாக்கடையை ஆற்றிலும்
நல்ல நீரை பாட்டிலிலும்
அடைத்தவர்கள் நாம்!
நம்மிடமிருந்த
சொம்புகளும், லோட்டாக்களும்
காணாமல் போய்
இன்று
வாட்டர் பாட்டில்களே மிஞ்சுகின்றன!
நாளை
நம் கல்லறைகளைத்
தோண்டத் தோண்ட
கிடைக்க இருப்பவைகள்
கேரி பைகளும்
பாலீதீன் பாட்டில்களும் என்று
நமக்குத் தெரியும்!
அதனாலென்ன
வருங்காலம்
எதையும் சீரணித்துக் கொள்வதாக
என்று நாம் பிரார்த்திப்போம்!
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...