தமிழர்களுக்கான மதம் தாமதம்
ஒரு நொடியின்
தாமதம் ஓர் ஓட்டப் பந்தய வீரருக்குத் தெரியும்.
ஒரு நிமிடத்தின்
தாமதம் பேருந்து, தொடர்வண்டிகளைத் தவற விட்டவர்களுக்குத் தெரியும்.
ஒரு மணி நேரத்தின்
தாமதம் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்பவர்களுக்குத் தெரியும்.
ஒரு நாளின்
தாமதம் மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கியவனுக்குத் தெரியும்.
ஒரு வாரத்தின்
தாமதம் மாதம் பிறந்தால் சம்பளம் வாங்குகின்றவனுக்குத் தெரியும்.
ஒரு மாதத்தின்
தாமதம் அடகு வைத்த நகையை ஏலத்தில் இழந்தவனுக்குத் தெரியும்.
ஒரு வருடத்தின்
தாமதம் அரியர்ஸ் எழுதி படித்து முடிப்பவனுக்குத்தான் தெரியும்.
ஒரு தலைமுறையின்
தாமதம் தமிழர்களுக்குத்தான் தெரியும். குற்றவாளி என குற்றம் சுமத்தப்பட்டவர் தமிழகத்தையும்
ஆண்டு விட்டு, மரணத்தின் மூலம் வழக்கிலிருந்து விடுதலையையும் பெற்றுச் சென்று விட்டார்.
குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரையில் ஒருவர் எவ்வளவு குற்றங்களையும் வேண்டுமானால்
செய்து கொண்டிருக்கலாம். அதை இந்தத் தலைமுறையில் நிரூபிக்க வேண்டுமானால், நாம் அடுத்தத்
தலைமுறை வரை காத்திருக்க வேண்டும் என்கிற இன்னொரு செய்தியும் இதில் இருக்கிறது.
காலம் கடந்து தண்டனைகள் வழங்கப்படும் போது
சம்பந்தப்பட்டவர்களை மரணம் முந்திக் கொண்டு காப்பாற்றி விடுகிறது. இப்படி குற்றவாளிகளைத்
தண்டனை அனுபவிக்க விடாமல் அதற்கு உடந்தையாக இருக்கும் மரணத்திற்கு உரிய தண்டனை கொடுக்கப்பட
வேண்டியது முக்கியமாகும். சட்டத்தையும் நீதியையும் பொருத்த வரையில் தவறு செய்தவர்களுக்கும்,
அதற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கும் தண்டனை தரப்பட வேண்டும்தானே?!
*****
No comments:
Post a Comment