பழி
மணல் அள்ளிய
மாபாதகர்களைத்
தடுக்காமல் விட்டதற்காக
பழி வாங்கவே
கழிவுநீர்க் கால்வாயாக
ஓடுகிறது
நன்னீர் ஓடிய
ஆறு!
*****
மீண்டும் மறுபடியும்
அடிக்கடி சளி பிடிக்கும்
மகளுக்கு
வெண்ணிலா ஐஸ்கிரீம் மேல்
அப்படி ஒரு ஆசை!
"இனிமே சாப்பிட
மாட்டேன்பா!
இந்த ஒரு தடவை ப்ளீஸ்!"
என்று கேட்கையில்
ஐஸ்கிரீம் பெட்டிப் போலாகிறது
மனசு!
வாங்கிய ஐஸ்கிரீமை
மரக்குச்சியில்
ஆசை ஆசையாய்ச்
சாப்பிடுகையில்
மறுபடியும் கேட்கிறாள்
"இனிமே கேட்க மாட்டேன்பா!
இன்னும் ஒண்ணே ஒண்ணு
ப்ளீஸ்!"
*****
No comments:
Post a Comment