7 Jan 2017

ஏக்க இருள்


இரவில் இல்லா உறக்கம்
உறவுகள், நட்புகள்
வந்து விட்டால்
அவர்கள் முன்
அழகாக ரைம்ஸ் சொல்பவள்,
இளைய தளபதி விஜய்யை
தொலைக்காட்சியில்
பார்க்கும் போதெல்லாம்
அற்புதமாக நடனம் புரிபவள்,
டாட்டா காட்டி
பள்ளி வாகனம் ஏறத் தெரிந்தவள்,
மாலை 6 மணியானதும்
வீட்டுப்பாடம்
செய்ய வேண்டுமென அமர்பவள்
என்ன செய்வதென்று தெரியாமல்
இரவெல்லாம்
உறங்கத் தெரியாமல்
அமர்ந்திருக்கிறாள்
படுப்பதற்கு முன்
கதை சொல்லும்
பாட்டியும், தாத்தாவும்
முதியோர் இல்லம் போன பின்!
*****

ஏக்க இருள்
எரியத் தொடங்கும்
விளக்கு
இருளின் ஆடைகளைக்
கிழிக்கின்றன.
தன்னைத் தானே
ஒரு முறை
பார்த்துக் கொள்கிறது
இருள்.
வெட்கம் பிடுங்கித் தின்ன
இரவை இரவாக
இருக்க விடாததை எண்ணி
ஒரு மின்வெட்டுப் பொழுதுக்காக
காத்திருக்கும்
இருளின் தவிப்புத் தெரியாமல்
அதற்குள் விடிந்து விடுகிறது
பொழுது.
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...