9 Jan 2017

மிச்சம்


நிச்சயம்
காதலித்தவனை மறுத்து, சொந்த சாதியில் நல்ல குடிகார மாப்பிளையாய்ப் பார்த்து கட்டி வைத்தார் அப்பா.
*****

சாட்சி
யுத்த கொடுமைகளுக்குத் தப்பி வந்தவள் வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்தது வன்கொடுமையின் சாட்சியாய் மூன்று மாத கரு.
*****

நம்பிக்கை
எப்படியும் லிஸ்ட் மாறும் என்ற நம்பிக்கையோடு இருந்தான் கட்சிக்கு விருப்ப மனுவையும், பணப்பெட்டியையும் சேர்த்துக் கொடுத்த சின்ராசு.
*****

கேள்வி
"கட்சியில் எம்.எல்.ஏ. சீட்டுவாங்குறதுக்கே எல்லா பணத்தையும் கொடுத்துட்டா, அப்புறம் ஓட்டுப் போடுறதுக்கு எப்படி பணம் கொடுக்குறது?" சீறினான் பணம் கொடுக்காமலே சீட்டு வாங்க நினைத்த ஆதிமூலம்.
*****

மிச்சம்
"கட்சியில சீட் இல்லேன்னுட்டாங்க! செலவு மிச்சம்!" என்று சந்தோசப்பட்டுக் கொண்டார் விருப்ப மனு கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்ட வெள்ளைச்சாமி.
*****

No comments:

Post a Comment