9 Jan 2017

குழந்தைகளாகிய அவர்களுக்கு...


குழந்தைகளாகிய அவர்களுக்கு...
அரச மரத் தொட்டில்களோடு
அரசுத் தொட்டில்களும் உண்டு.
களவாடப்பட்டு விற்கப்படுவதோடு
பிச்சையெடுக்க வைக்கப்படுவதும் உண்டு.
பிள்ளைக்கறிக் கேட்டு
பிள்ளைத்தமிழ் பாடும் மரபும் உண்டு.
பிள்ளை என்று தென்னம்பிள்ளையையும்
போற்றுவது உண்டு.
இடித்தப்புளி போல ஆட்டோக்களில் அடைத்து
பிஞ்சு உள்ளங்கள் வெம்ப
இன்ஜினியர், டாக்டர் கனவுகளைத்
திணிப்பது உண்டு.
அவர்களுக்குப் பிடிக்கும் என
நூடுல்ஸை செய்தோ,
பீட்சா, பர்க்கரை வாங்கிக் கொடுத்தோ,
கோலாவைக் குடிக்க வைத்தோ
நம் பேரன்பை
நாம் புலப்படுத்திக் கொள்வதும் உண்டு.
*****

No comments:

Post a Comment