9 Jan 2017

பரிகசிக்க...


சுதந்திரம்
நகைகளைப் பத்திரமாகப்
பார்த்துக் கொள்ளுங்கள்.
வெளியாட்களிடம்
எச்சரிக்கையாக இருங்கள்.
தனியாகச் செல்வதைத் தவிருங்கள்.
கூட்டத்தில் கவனமாகச் செல்லுங்கள்.
வீட்டைப் பூட்டிக் கொண்டு
பத்திரமாக இருங்கள்.
சொன்னதைச் சொன்னபடி
கேட்டுக் கொண்டு
சுதந்திரமாக இருக்கிறாள்
இந்தியப் பெண்.
*****

பரிகசிக்க...
எதிரே யாரும் இல்லாமல்
ஒரு விளையாட்டை
தனிமையில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறான்
வேங்கடமல ராஜூ.
ஒரு கூட்டம்
கூடி நின்று பார்ப்பதாகவும்
கை தட்டி ரசிப்பதாகவும்
தான் அதிபுத்திசாலியென
ஏற்கப்பட்டதாகவும்
நினைத்துக் கொள்கிறான்.
பெரிதாகச் சிரித்துக் கொண்டே
தன் சட்டையை
அங்கங்கே கிழித்துக் கொண்டு
அலைகிறான்,
நாமெல்லாம் அவனை
பைத்தியம் என பரிகசிக்க!
*****

No comments:

Post a Comment