கட்டுக் கட்டாக ரெண்டாயிரம் நோட்டுகள்
சமத்து
சம்புலிங்கம் வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனையில் கட்டுக் கட்டாக ரெண்டாயிரம் நோட்டுகள்
கைப்பற்றப்பட்டன.
அதனைத்
தொடர்ந்த அவரிடம் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டு, அவருக்கு வருமான வரித்துறையினர்
சம்மன் அனுப்பினர்.
விசாரணைக்கு
ஆஜரானார் சம்புலிங்கம்.
அவரிடம்
சரமாரியாகக் கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டன.
ஒவ்வொரு
கேள்விக்கும் பொறுமையாக அவர் பதில் சொன்ன விதம் வருமான வரித்துறையினரையே ஆச்சர்யப்படுத்தியது.
கடைசியாக,
"உங்களிடம் எப்படி கட்டுக் கட்டாக ரெண்டாயிரம் நோட்டுகள் வந்தன?" என்ற கேள்வி
கேட்கப்பட்ட போது,
சமத்து
சம்புலிங்கம் சமத்தாகச் சொன்னார், "ரெண்டாயிரம் நோட்டு சேகரிக்கிறதுல உள்ள ஆர்வத்துல,
கொஞ்சம் ஆர்வ கோளாறுல கட்டுக் கட்டா நிறைய சேர்த்துட்டேன். அவ்வளவுதான்!"
*****
No comments:
Post a Comment