மாற்று சினிமா - சம்புலிங்கத்தின்
திரைக்கதை
சர்வதேச
தரத்திற்குத் தமிழ்த் திரைப்படங்கள் வருவதில்லை என்பது சமத்து சம்புலிங்கத்தின் பலநாள்
கவலை.
இதற்காகவே
சம்புலிங்கம் திரைத்துறையில் சேர்ந்து உதவி இயக்குநராகி, தற்போது இயக்குநராகும் முயற்சியில்
தாயரிப்பாளர்களிடம் கதை சொல்லிக் கொண்டு இருந்தார்.
இப்படி
ஒரு திரைக்கதையைத் தமிழ்த் திரையுலகம் பார்த்திருக்கக் கூடாது என்ற முனைப்பில் அப்படி
ஒரு திரைக்கதையை உருவாக்கியிருந்தார்.
அந்தத்
திரைக்கதையைத்தான் சம்புலிங்கம் பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் சொல்ல ஆரம்பித்தார்.
கதையை
சீன் பை சீனாக சொல்லிக் கொண்டு வந்தார் சம்புலிங்கம். கேட்ட தயாரிப்பாளர் இருக்கையின்
நுனிக்கே வந்து விட்டார்.
"இண்டர்வெல்லுக்கு
அப்புறம் ஹீரோ..." என்று சொல்லி விட்டு சம்புலிங்கம் ஒரு சிறிய இடைவெளி விட்டு
சில நொடிகள் அமைதி காத்தார்.
தயாரிப்பாளரால்
அதற்கு மேல் ஆவலைக் கட்டுபடுத்த முடியவில்லை. "வில்லன்கிட்ட சிக்கிக்கிறாரா?"
என்று உணர்ச்சிவசப்பட்டு கேட்டே விட்டார்.
சம்புலிங்கம்
வெற்றிப் பெருமிதத்தோடு சொன்னார், "ம்ஹூம்! ஏ.டி.எம். வரிசையில சிக்கிக்கிறார்!"
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com
No comments:
Post a Comment