ரெண்டாயிரம் நோட்டில் நோட்டு மாலை
தான்
சேர்ந்திருந்த கட்சி மேல் ஒரு வெறுப்பு ஏற்பட்டது சமத்து சம்புலிங்கத்துக்கு.
கட்சித்
தலைவர் மேல் ஏற்பட்ட வெறுப்பு அது. படிப்படியாக வளர்ந்த கட்சியை வெறுக்கும் அளவுக்கு
வந்து விட்டது.
யோசித்துப்
பார்த்தார் சம்புலிங்கம். "இப்படி ஒரு கட்சித் தலைவர் இந்தக் கட்சித் தேவையா?"
அவரைக்
காலி செய்வது என்ற முடிவெடுத்தார்.
பொதுக்கூட்டத்தில்
பேசிக் கொண்டிருந்த தலைவர் முன் சென்ற சம்புலிங்கம் அவருக்கு திடீரென மாலையிட்டார்.
ரெண்டாயிரம் நோட்டு மாலை.
தலைவரை
எப்படியும் கைது செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையோடு, அப்படியே நைசாக கூட்டத்தில்
புகுந்து நழுவினார் சம்புலிங்கம்.
*****
No comments:
Post a Comment