இறுக்கம்
கண்காணிப்பு கேமிரா இருப்பது தெரிந்ததும் இறுகிப்
போயின அனைவரது முகங்களும்.
*****
கும்மாளம்
ஒப்பாரி வீட்டில் கும்மாளமாய் விளையாடிக் கொண்டிருந்தன
குழந்தைகள்.
*****
எதிர் வினை
பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்ததும் நினைவில்
வந்து ஆடியது என்னை அழகாய்ப் புகைப்படம் எடுப்பதாகச் சொன்ன புகைப்படக்காரரின் வார்த்தைகள்.
*****
கெமிஸ்ட்ரி
கெமிஸ்ட்ரி சரியில்லையென்று எலிமினேட் ஆனார்கள்
மன்மதனும், ரதியும்.
*****
வரம்
தங்கக் கோடரி தந்த தேவதையிடம் மரவெட்டிக் கேட்டான்,
"வெட்ட ஒரு மரம் தா!"
*****
No comments:
Post a Comment