ஞானி
தவற விட்ட ரயிலுக்காக சந்தோசித்தான், சிரித்தான்,
மசாலா போண்டா விற்கும் அவன்.
*****
கவனிப்பு
ஒரு கட்சியில் இருந்த வரை கவனிப்பு பெறாத சந்திரகுமார்
தமிழகமெங்கும் கவனிக்கப்பட்டார் கட்சி மாறியதும்.
*****
பொத் என...
பொத் என... விழுந்தது சாப்பாடு தாத்தாவின் தட்டில்.
*****
சிதறல்
பூட்ட மறந்து விட்ட குழந்தைகள் பூங்கா முழுவதும்
சிதறிக் கிடந்தன ஆணுறைகள்.
*****
மழை ரசனை
மழை வரித்துக் கொண்டு போனது சாலையோர ஓவியத்தை.
*****
No comments:
Post a Comment