8 Jan 2017

ஆதியில் புதிதாய்ப் பிறந்து...


ஆதியில் புதிதாய்ப் பிறந்து...
இந்தப் பூமியில்
கால்வாசி பகல், கால்வாசி இருள்,
கால்வாசி நீ, கால்வாசி நான்
என இருந்தால் எப்படி இருக்கும்?
நிலமான என் மீது கடலென விழுந்து
கடலென விழுந்த உன் மீது
மேகமென தவழ்ந்து
மேகத்திலிருந்து மழையாய்
உன் மீது பொழிந்து
நீராக என் நிலத்துக்குள்
நீ புகுந்து
நம் காதலைப் புரிந்து கொள்ள
இந்த பூமிக்கு
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படலாம்.
சாதியின் வேரை
எம் நிலத்தில் வேரூன்றி
உம் மடியிலிருந்து நீரேந்தி
ஊற்றிக் கொண்டிருக்கும்
இவர்களுக்கு
ஒரு போதும் புரியாது
ஆதியில் நாம் பிறந்த போது
சாதி இல்லை என்பது!
நீயே சொல்,
இவர்கள் எல்லாரையும் அழித்து விட்டு
ஆதியில் பிறப்போமா நாம்
பூமியில் புதிதாய்க் காதலிக்க!
*****

No comments:

Post a Comment

மகிழ்ச்சி எனும் மந்திரம்

மகிழ்ச்சி எனும் மந்திரம் இந்த உலகில் எவ்வளவோ புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது எல்லாவற்றையும் புரிய வைக்க அன்பே நீ என்னுடன் இருப்பாயா? ...