7 Jan 2017

மீதித் தமிழனின் பண்பாடு


மீதித் தமிழனின் பண்பாடு
நீராகரமோ
மோரோ
தந்து உபசரித்த நிலை மாறி
தேநீரோ
காபியோ
போட்டுக் கொடுத்த காலம் மாறி
கோலாவும்
பப்ஸூம்
பருகத் தந்த காலம் மாறி
வீட்டுக்கு வந்த உறவை
அழைத்துக் கொண்டு
டாஸ்மாக்கிற்குச் செல்கிறான்
விருந்தோம்பிய
நெடிய வரலாற்றை
விரிவாக்கியபடி
ஆதித்தமிழனிடமிருந்து
கொஞ்ச நஞ்சம் உயிர்
எஞ்சியிருக்கும்
மீதித்தமிழன்!
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...